Tamil cricket news
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
Related Cricket News on Tamil cricket news
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் கட்டாயம் இருக்க மாட்டேன் என்று கூறிய ஹர்திக் பாண்டியாவிற்கு தனது யூட்டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறிய ஆர்சிபி அணியின் கேப்டன் அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் அணிகளுக்கு வார்னிங் கொடுத்த சுனில் நரைன்!
உள்ளூர் போட்டியில் 7 ஓவர்கள் வீசி, ஏழு மெய்டன் செய்து, 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன். ...
-
இந்திய அணிக்கு மேலும் ஒரு அடி; 6 மதங்களை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ் ஐயர்!
அடுத்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவற்றிலிருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5 முதல் தொடக்கம்; 12 மைதானங்கள் தேர்வு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் என்றும், 12 மைதானங்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WPL 2023: நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
SA vs WI, 3rd ODI: கிளாசென் சதத்தால் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்தது. ...
-
WPL 2023: தஹ்லியா மெக்ராத் அதிரடி அரைசதமல்; டெல்லிக்கு 139 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs NED, 1st ODI: தேஜா நிடமானுரு சதத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் யார் சிறந்தவர்? - விராட் கோலியின் பதில்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸும் தான் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் சிறந்தவர்கள் என இந்திய அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மிகப்பெரிய பிரச்சினைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - ஆரோன் ஃபிஞ்ச்!
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த முறை வெல்வது சற்று கடினம் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். ...
-
WPL 2023: ஆர்சிபியை மீண்டும் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. ...
-
SA vs WI, 3rd ODI: விண்டீஸை 260 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 260 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்க அணி. ...
-
WPL 2023: மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி; எளிய இலக்கை விரட்டு மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50