Tamil cricket news: Cricket News & Match Updates
நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் மிகவும் கடினமான பவுலர்: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் ரெய்னா!
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2018 வரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 205 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவத்திலும் சதம் அடித்த மிகச்சிறந்த வீரரான சுரேஷ் ரெய்னா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தையுமே சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்.
அதிலும் குறிப்பாக தோனியின் தலைமையின் கீழ் அவரது செயல்பாடு உச்சத்தில் இருந்ததை நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் பேசுகையில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார். Read More...