Tamil cricket news: Cricket News & Match Updates
காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீல நிற ஜெர்சி தான் ஞாபகத்துக்கு வரும். இந்திய அணியின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அபிமானத்தை விவரிக்கும் போது பிலீட் ப்ளூ(Bleed Blue) என்று தான் கூறுவார்கள். அப்படி நீல நிறம் என்றாலே இந்திய கிரிக்கெட் அணி என்பது எழுதப்படாத விதி. இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் விளையாடி வரும் காலத்தில் இருந்தே நீல நிற ஜெர்சியை தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் அணிந்து வருகிறது.
இந்த நிலையில் இதனை மாற்றும் முயற்சியில் தற்போது பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்திய அணி ஜெர்சியில் காவி நிறத்தை புகுத்தி அதனை டிசைனாக மாற்றினார்கள். இதேபோன்று 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஜெர்சி முதல்முறையாக மாற்றப்பட்டது. அது ஹோம் மற்றும் அவே என இரு ஜெர்சிகள் பயன்படுத்தப்பட்டது. இதில் அவே ஜெர்சிகள் இந்திய அணிக்கு காவி நிறமும் நீல நிறமும் கலந்த வகையில் வடிவம் மாற்றப்பட்டது. Read More...