Tamil cricket news: Cricket News & Match Updates
ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றில் இருந்து வெளியேறி வந்தது. அதன்பின் ரோஹித் சர்மா தலைமையில், பேட்டிங் யூனிட்டில் உள்ள அனைத்து வீரர்களும் தைரியமாக விளையாடுவது என்று அணியின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ரோஹித் சர்மா ஆட்டத்தை எப்பொழுதும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் வேகமாக துவங்குவதை பற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட ஆரம்பித்தார்.
இதனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக ஆரம்பித்தது ஆனால் அவருடைய சராசரி குறைய ஆரம்பித்தது. மேலும் அவருடைய சதங்களும் குறைந்து அரை சதங்கள் அதிகமாகின. ரோஹித் சர்மா தன்னுடைய வேலை அடிக்க பெரிய தொடக்கம் தருவது மட்டுமல்ல அதிரடியான தொடக்கம் தருவதும்தான் என்று நேற்றைய பேட்டிகள் கூட மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். Read More...