Tamil cricket news: Cricket News & Match Updates
2023 உலக கோப்பையின் சிறந்த பவுலர் அவர் தான் - பென் ஸ்டோக்ஸ் பாராட்டு!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்தியா அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.
இத்தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்களும் தங்களுடைய அபார திறமையால் எதிரணிகளை தெறிக்க விட்டு வருவதே இந்தியாவின் வெற்றிகளுக்கு காரணம் என்று சொல்லலாம். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயத்தால் வெளியேறிய பாண்டியவுக்கு பதில் வாய்ப்பு பெற்று 5 விக்கெட்டுகளை சாய்த்து ஐசிசி தொடரில் நியூசிலாந்தை 20 வருடங்கள் கழித்து இந்தியா தோற்கடிக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...