Tamil cricket news: Cricket News & Match Updates
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - மேத்யூ வேட்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த போது, இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுஹாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 123 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 39 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவீஸ் ஹெட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், ஹார்டி 16, இங்லீஸ் 10, டிம் டேவிட், மற்றும் ஸ்டோய்னிஸ் 17 ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். Read More...