Tamil cricket news: Cricket News & Match Updates
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி!
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த வருடத்திலிருந்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013 – 2023 வரையிலான காலகட்டங்களில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோஹித் சர்மா மும்பையை வெற்றிகரமான அணியாக மாற்றினார்.
இருப்பினும் அந்த நன்றியை மறந்த மும்பை நிர்வாகம் அவரை கழற்றி விட்டது அந்த அணி ரசிகர்களிடமே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மறுபுறம் 2016 முதல் 2021 வரை மும்பை அணியில் வளர்க்கப்பட்டு இந்தியாவுக்காக அறிமுகமான ஹர்திக் பாண்டியா முக்கிய வீரராக உருவெடுத்தார். இருப்பினும் அவரை 2022 சீசனில் மும்பை கழற்றி விட்ட போது 15 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் நிர்வாகம் கேப்டனாகவும் அறிவித்தது. Read More...