Tamil cricket news: Cricket News & Match Updates
ரிஷப் பந்த் விளாசிய நோ- லுக் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் அதிகபட்சமாக 85 ரன்களையும், அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 54 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் 273 ரன்கள் என்ற இலமாய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், அபிஷேக் போரல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் ரிஷன் பந்த் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். Read More...