Tamil cricket news: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்னடைவை சந்தித்த பாபர் ஆசாம்; புரூக், முஷ்ஃபிக்கூர் முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற்றுவரும் இங்கிலாந்து - இலங்கை மற்றும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவடைந்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியும் என வெற்றிபெற்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூ முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திலும், டேரில் மிட்செல் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3 இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். Read More...