Tamil cricket news: Cricket News & Match Updates
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய கார்ன்வால்; வைரலாகும் காணொளி!
பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டி பார்படாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி பெவிலியனுக்கு திரும்பினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 32 ரன்களையும், ஜோஷுவா டா சில்வா 25 ரன்களையும் சேர்த்தனர். பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரக்கீம் கார்ன்வால் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு துணையாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், ஒபேத் மெக்காய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். Read More...