Tamil cricket news
INDW vs WIW, 3rd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா சேத்ரி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உமா சேத்ரி 2 ஆவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Tamil cricket news
-
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SA vs PAK, 2nd ODI: பேட்டர்கள் அதிரடி; 328 ரன்களை குவித்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 329 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs WIW, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய மந்தனா, கோஷ்; விண்டீஸூக்கு இமாலய இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் ஏழு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd ODI: ஜிம்பாப்வேவை 54 ரன்களில் சுருட்டி ஆஃப்கான் இமாலய வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BBL 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸைப் பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
போதுவான இடத்தில் நடத்தப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்; ஐசிசி அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ZIM vs AFG, 2nd ODI: செதிகுல்லா அடல் அசத்தல் சதம்; ஜிம்பாப்வேவிற்கு 287 டார்கெட்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ...
-
அஸ்வினைத் தொடர்ந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடிரென ஓய்வை அறிவித்தது போல், விரைவில் ஓய்வை அறிவிக்கக்கூடிய மூன்று இந்திய வீரர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அஸ்வினுக்கு சிறப்பு பரிசை வழங்கிய லையன், கம்மின்ஸ்!
நாதன் லையன், பாட் கம்மின்ஸ் இருவரும் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 05 May 2026 10:06
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25