Sanju samson: Cricket News & Match Updates
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது வரும் ஜூன் மாதம் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் சமீபத்தில் நியூயார்க் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. மேலும் அக்குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 05ஆம் தேதி விளையாடவுள்ளது. Read More...