Sam curran: Cricket News & Match Updates
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் - சாம் கரண்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் இப்போட்டியில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய சாம் கரண் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...