Rohit sharma: Cricket News & Match Updates
இந்திய அணியின் மிகப்பெரும் பலமே அவர் தான் - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரை சென்ற நியூசிலாந்து அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தையும் தவறவிட்டது. டி.20 உலகக்கோப்பை தொடரை முடித்த அடுத்த தினமே இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியிலும், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு வில்லனாக இருந்த நியூசிலாந்து அணியை, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். Read More...