Rohit sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இதில் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்களைச் சேர்க்க, அடுத்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங் 25 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்களையும், சாம் கரண் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களையும் சேர்க்க, இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஷாங் சிங் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். Read More...