Rohit sharma: Cricket News & Match Updates
இதுதான் கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் - ரோஹித் சர்மா!
வரும் ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர் சஹால், ஷிவம் தூபே, அக்ஸர் படேல் உள்ளிட்ட வீரர்களும் இடம் கிடைத்துள்ளது. Read More...