Ravichandran ashwin: Cricket News & Match Updates
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று முடிந்துள்ளது. பரபரப்பான இந்த போட்டியில் ஷுப்மன் கில், துருவ் ஜுரெல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது.
அதிலும் இப்போட்டியில் குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜுரெல் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதைத்தொடர்ந்து இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது களத்தில் நிதானமாக செயல்பட்டதுடன் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது துருவ் ஜுரெலுக்கு வழங்கப்பட்டது. Read More...