Pc vs jsk: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், அடுத்து வந்த விஹான் லூபே 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...