Mohammad shami: Cricket News & Match Updates
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
கடந்த வருட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிக மிக மோசமான தோல்விகளை சந்தித்து, லீக் சுற்றுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலியும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்றது. இந்திய அணி அடுத்தடுத்து பல வெற்றிகளை பெற்றதால் இந்திய அணியில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது, இந்த முறை இந்திய அணி அசால்டாக டி20 உலகக்கோப்பையை வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. Read More...