Mict vs pc head to head
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
MI Cape Town vs Pretoria Capitals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் ரஷித் கான் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி ஒரு முடிவில்லை என மொத்தம் 30 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் பிளே ஆஃப் சுற்றிலும் விளையாடவுள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி இப்போட்டியில் வெற்றிபெற்று அறுதலை தேடும் முனைப்பில் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Mict vs pc head to head
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42