Mark chapman: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த திலக் வர்மா!
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் வெற்றியில் இளம் வீரர் திலக் வர்மா முக்கிய பங்கு வகித்தார். இப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என72 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் திலக் வர்மா 72 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் மார்க் சாப்மேனின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். Read More...