Mark adair: Cricket News & Match Updates
ZIM vs IRE, Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டி மெக்பிரைன் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களையும், மார்க் அதிர் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...