Kolkata knight riders: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; கேகேஆர் அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்து தங்களது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
அதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகள் என 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் அந்த அணி மேற்கொண்டு இரண்டு வெற்றிகளை பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும் என்பதால், அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. Read More...