Jos buttler: Cricket News & Match Updates
விராட் கோலி, கிறிஸ் கெயில் சாதனைகளை முறியடித்த ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ரஜாஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்களை குவித்தார்.
இதனையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தின் மூலம் கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் தொடக்கத்தில் மெதுவாக விளையாடிய பட்லர் முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் ஆட்டம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய அவர், 55 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். Read More...