Jay shah: Cricket News & Match Updates
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவடையவுள்ளது. இதனையடுத்து இந்திய அனியின் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியுள்ளது. மேலும் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களையும் வெளியிட்டிருந்தது. Read More...