Itt vs lkk
டிஎன்பிஎல் 2025: சாத்விக், எசக்கிமுத்து அபாரம்; ஹாட்ரிக் வெற்றியில் திருப்பூர் தமிழன்ஸ்!
திருநெல்வேலி: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அமித் சாத்விக் மற்றும் எசக்கிமுத்து ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜிதேந்திர குமார் 6 ரன்னிலும், லோகேஷ்வர் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சச்சினும் 24 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த ராகவேந்திரன் 11, ஷாருக் கான் 19, விஷா வைத்யா 13 என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
Related Cricket News on Itt vs lkk
-
டிஎன்பிஎல் 2021 : கோவை அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருப்பூர்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59