Indian cricket team: Cricket News & Match Updates
ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை காண நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது . இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டி சொதப்பலாகவே அமைந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா ஓரளவு சிறப்பாக விளையாடினார். Read More...