Indian cricket team: Cricket News & Match Updates
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான சாஹல், அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் உலகக்கோப்பைத் தொடருக்கும் இவர்கள் தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது மறைமுகமாகவே தெரிகிறது. இந்த நிலையில் தேர்வு செய்யப்படாத வீரர்களுக்கு, ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “சில சிறந்த வீரர்கள் காம்பினேஷன் காரணங்களால் விடுபட்டுள்ளனர். நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இணைந்து தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கம் அளித்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அணித் தேர்வுக்கு பின் பேசி இருக்கிறோம். பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் போது இளம் வீரர்களுக்கு கூறிவோம். அவர்களின் முகத்திற்கு முன் நேரடியாக ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக கூறிவிடுவோம். Read More...