Indian cricket team: Cricket News & Match Updates
வாய்ப்பு கிடைத்தால் டி20 உலகக்கோப்பையில் அசத்த தயாராக உள்ளேன் - முகமது ஷமி!
நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை பவுலராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2015 உலகக் கோப்பைக்கு பின் அனுபவத்தால் முன்னேறிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதை விட 2023 உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் விளையாடாத அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பற்றார்.
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அவர் மொத்தம் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியா இறுதிப்போட்டியில் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக அரையிறுதியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடிக்க உதவிய அவர் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் போட்டியில் 6 விக்கெட்களை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்தார். Read More...