Indian cricket team: Cricket News & Match Updates
ஒரு டெஸ்டில் வெற்றி பெற எல்லாம் சரியாக நடக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. அதிலும் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது 212 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையடிய இந்திய அணி 477 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 110 ரன்களையும், ரோஹித் சர்மா 103 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது 195 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டார். Read More...