Harsha bhogle: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணியை அறிவித்த ஹர்ஷா போக்லே!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த பிளேயிங் லெவனை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே அறிவித்துள்ளார். அதன்படி அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தான் வீர்ர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனை தேர்வு செய்யதுள்லார். Read More...