Hardik pandya: Cricket News & Match Updates
ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை -ஹர்திக் பாண்டியா!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் முந்தைய தோல்விக்கும் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்தவரை, இது அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் விதம், வெளியில் இருந்து ஒரு நிம்மதியைத் தருகிறது. ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர் தனது ஃபார்மில் இருக்கும் போது எதிரணி ஆட்டத்திலிருந்து வெளியேறும் என்பது எங்களுக்குத் தெரியும். Read More...