Engw vs nzw head to head: Cricket News & Match Updates
இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர், ஐந்தாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England Women vs New Zealand Women 5th T20I Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெறுவதுடன், தொடரை முழுமையாக கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. Read More...