Chennai super kings vs rajasthan royals: Cricket News & Match Updates
மூன்கூட்டிய களமிறங்கியது ஏன்? - அஸ்வின் பதில்!
சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவாகவே பறிபோயின. நான்காவது விக்கெட்டுக்கு ஹெட்மயர் அல்லது துருவ் ஜுரல் இருவரில் ஒருவர் உள்ளே வருவர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஸ்வின் உள்ளே வந்து மிகச்சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்துக்கொடுத்தார். அதன் பிறகு பந்துவீச்சிலும் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முக்கியமான இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இறுதியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. விருதைப் பெற்ற பிறகு பேட்டியளித்த அஸ்வின் கூறுகையில், “இந்த விருது எனக்கு கிடைத்ததால் பலரும் ஆச்சரியப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போது டாப் ஆர்டரில் பேட்டிங் இறங்கினாலும், அது நான் எடுத்த முடிவு என்று அனைவரும் கருதுகின்றனர். அப்படியல்ல! அது எனக்கு கொடுக்கப்பட்ட ரோல். Read More...