Border gavaskar trophy: Cricket News & Match Updates
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடிக்காத குல்தீப் யாதவ்; காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலா 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (அக்டோபர் 25) அறிவித்தது. அந்தவகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் நிலையில் அடுத்தாடுத்த போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறும்.
இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்கள் சிலரும் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். அந்தவகையில், முகமது ஷமி மற்றும் அக்சர் படேல் தவிர, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத மற்றொரு நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ். Read More...