Border gavaskar trophy: Cricket News & Match Updates
காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணியில் இருந்து மைக்கேல் நேசர் விலகல்!
இந்திய ஏ அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதால் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது இன்று மெல்போர்னில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற் ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...