Bjorn fortuin: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அதன்பின் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லியுஸ் டூ ப்ளூய், மோயீன் அலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். Read More...