Bgt 2024 25
கபா டெஸ்ட்: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரு அணிகளிலும் மாற்றம் நிகழ வாய்ப்பு!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Related Cricket News on Bgt 2024 25
-
இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்; புஜாரா கருத்து!
இந்திய அணி பேட்டிங் வரிசை வலுப்பெற வேண்டும் என்று அணி கருதினால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே மாற்றமாக இருக்க முடியும் என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பி வருவார் - கபில் தேவ் நம்பிக்கை!
ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
கபா டெஸ்ட்: பிளேயிங் லெவனில் மாற்றங்களைச் சேய்யும் இந்திய அணி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சிராஜ், ஹெட்டிற்கு அபராதம்!
ஐசிசி-யின் நடத்தை விதிகளை மீறியதாக முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க்கை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதையடுத்து டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார் ஆகியோரை அந்த அணி கேப்டன் பாராட்டியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது,ஆனால் அதனை நாங்கள் பயன்படுத்த தவறிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி; மீண்டும் முன்னேறிய ஆஸி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
Day-Night Test: ஸ்டார்க், ஹெட், கம்மின்ஸ் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
சிராஜுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கான காரணத்தை விளக்கிய டிராவிஸ் ஹெட்!
எனது விக்கெட்டினை வீழ்த்தியதும் நான், அவர் நன்றாக பந்துவீசியதாக கூறினேன். ஆனால், அவர் அதனை வேறு விதமாக எடுத்துக்கொண்டு என்னை பெவிலியனுக்கு செல்லுமாறு ஆக்ரோஷமாக சைகை செய்தார் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
Day-Night Test: டிராவிஸ் ஹெட் அபார சதம்; மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பகளிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
Day-Night Test: நிதானம் காட்டும் ஆஸி; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் 180 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
Day-Night Test: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த ஜெய்ஸ்வால்- வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59