Aus vs ind probable playing xi: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS vs IND, 5th T20I, Cricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நான்கு டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள த கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். மறுபக்கம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...