Ben stokes: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: மீண்டும் காயமடைந்த ஸ்டோக்ஸ், ரசிகர்கள் அதிருப்தி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது ஏப்ரல் மூன்றாம் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்கள் பலர் காயமடைந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை அணி சார்பாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாகர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணியில் ஏற்கனவே முக்கியமான வீரர்கள் சிலர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கும் வேளையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலில் தோனியும் முழங்காலில் காயம் அடைந்ததாக கூறப்பட்டது. Read More...