Ban vs ire only test: Cricket News & Match Updates
BAN vs IRE, Test: சதமடித்து சாதனை படைத்த லோர்கன் டக்கர்; வலிமையான இலக்கை நோக்கி அயர்லாந்து!
அயர்லாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 12 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மொமினுல் ஹக் 17 ரன்னில் மார்க் அடைர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனையடுத்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷகிப் அல்-ஹசன் 87 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 135 பந்துகளில் சதத்தை எட்டினார். மேலும் இது அவரது 10ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். Read More...