Ambati rayudu: Cricket News & Match Updates
அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மாத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனெனில் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கவுள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்த விவாதங்களும் தொடங்கியுள்ளன.
மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான ரிடென்ஷன் முறையில் மாற்றங்களை கொண்டு வரவும் பிசிசிஐயிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளில் ஐபிஎல் அணிகள் மற்றும் பிசிசிஐ ஆகியவை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது ஐபிஎல் அணிகளுக்கு கூடுதல் வீரர்களை தக்கவைப்பதற்கு பிசிசிஐ அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஸ்கேவின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். Read More...