Adil rashid: Cricket News & Match Updates
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்க உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 5 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். Read More...