Adam gilchrist: Cricket News & Match Updates
கிரிக்கெட்டின் பழைய சர்வாதிகாரிகளுக்கு இது ஒருபோதும் இருவழி தெருவல்ல - சுனில் கவாஸ்கர் காட்டமான பதிலடி!
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் யாருமே எதிர்பாராத பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டு உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திரில்லர் முடிவுகளை கொடுப்பதுடன் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் வருமானத்தையும் கொட்டிக் கொடுக்கிறது. அதனால் உலக கோப்பைகளையும் அதை நடத்தும் ஐசிசியையும் தரத்திலும் பணத்திலும் மிஞ்சியுள்ள ஐபிஎல் மற்றும் பிசிசிஐ இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.
இதன் வளர்ச்சியை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு வாரியங்கள் தங்களது நாடுகளில் பிரத்தியேக டி20 தொடரை நடத்தினாலும் அவற்றால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை. ஐபிஎல் போலவே அதில் அணிகளை வைத்துள்ள நிர்வாகங்கள் மேலும் பணக்காரர்களாகி வெஸ்ட் இண்டீஸ், துபாய், தென் ஆபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் தங்களது கிளைகளை உருவாக்கி வருகின்றனர். Read More...