Aakash chopra: Cricket News & Match Updates
இந்த அணியால் கோப்பைக்கு அருகில் கூட செல்லமுடியாது - ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த முறை ஹோம் மைதானங்களில் விளையாடிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அணிகளுக்கும் கூடுதல் பலம் கிடைத்துள்ளது. இத்துடன் சேர்த்து ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்களும் வந்துள்ளன.
இதில் முக்கியமானது தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணி. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் இந்தாண்டு ஐபிஎல்-ல் விளையாட முடியாது. இதனையடுத்து புதிய கேப்டனாக டேவிட் வார்னர் களமிறங்குகிறார். இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்லாமல் உள்ள டெல்லி, இந்த முறை புதிய கேப்டனின் திட்டங்களால் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. Read More...