Zia ul haq: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; ஆர்காஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் நந்த்ரே பர்கர், நூர் அஹ்மத், ஸியா உல் ஹக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்காஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் டூ பிளெசிஸ் 7, டெவான் கான்வே 13 ரன்களில் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய்தேஜா மற்றும் டேரில் மிட்செல் இணை ஓரள்வு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் 50 ரன்கள் பர்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...