Tilak varma: Cricket News & Match Updates
இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணி அறிவிப்பில் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து வந்த சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் விளையாடாத இருபது வயதான திலக் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது பலரும் விரும்பிய முடிவாக இருக்கிறது.
அதே சமயத்தில் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு நாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் சஞ்சு சம்சனை பேக்கப் வீரராக வெளியே வைத்திருக்கிறார்கள். ஆசிய கோப்பை இந்திய அணி தேர்வில் மிக முக்கிய விவாதங்களாக இருப்பது இந்த மூன்று விஷயங்களும்தான். மற்றபடி காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் இருவரும் திரும்பி வந்திருப்பது இந்திய அணிக்கு நல்ல செய்தி. Read More...