Team of the tournament: Cricket News & Match Updates
T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு ஐசிசி மற்றும் முன்னாள் வீரர்கள் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்னணையாளருமான ஆகாஷ் சோப்ரா தன்னுடைய சிறந்த டி20 உலகக்கோப்பை பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார். Read More...