Tamil cricket news: Cricket News & Match Updates
விக்கெட் விடாமல் நின்று ரன் சேர்க்கும் ஆங்கர் இன்னிங்ஸ் அவசியம் - விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனிடையே லக்னோ அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. பவர் பிளே ஓவர்களில் 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்த விராட் கோலி, அங்கிருந்து அரைசதம் அடிக்க 10 பந்துகளை எடுத்துக் கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இறுதியாக 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த பேச்சுகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டிலும் ஆங்கர் ரோலில் விளையாடுவதற்கு தேவை இருப்பதாகவும், அது அவசியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா உடனான உரையாடலில் பேசும் விராட் கோலி, “டி20 கிரிக்கெட்டில் ஒரு பக்கம் விக்கெட் கொடுக்காமல் தேவையான நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டிய ரோல் முக்கியமானது என்றே நினைக்கிறேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆங்கர் ரோல் மிக அவசியம். Read More...