Tamil cricket news: Cricket News & Match Updates
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொனணட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவும், தென் ஆப்பிரிக்க அணியில் நந்த்ரே பர்கர், டேவிட் பெடிங்ஹாம் ஆகியோரும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். Read More...